சித்தர் மெய்ஞானத் திறவுகோல்

sivanimg

சிவாயநம

சித்தர்கள் கடைப்பிடித்த முக்திநெறியான சித்த மார்க்கத்தின் அரும்பெரும் இரகசியங்கள், அதிலடங்கிய உண்மை விளக்கங்கள் யாவும் 'யோகம், கற்பம், வாசியோகம், யோக தத்துவங்கள், ஞானம், வைத்தியம்' என ஆறு பெரும் பிரிவுகளில் இங்கு விளக்கப்பட்டுள்ளன. "யோக சாதகர்கள், அஷ்டாங்க யோகத்தில் எவ்வித யோகமும் பழகக் கூடியவர்கள், சித்தமார்க்க - வாசியோக சாதகர்கள், தியானம் பயில்வோர்" என பிறவிப்பிணி நீங்கி கடைத்தேறுவதற்கு தவித்து கொண்டிருக்கின்ற ஜீவாத்மாக்கள் அனைவருக்கும், 'சித்தர் மெய்ஞானத் திறவுகோல்' பதிவுகள் எல்லாமும் பயன்தரும். 'சித்தர் மெய்ஞானத் திறவுகோல்' நூலும் அது தொடர்புடைய ஆடியோகள் அனைத்தும் அறிவுத் தேடலுக்கு விடையாகி, அறிவுக்கண்ணை திறக்கும் வரப்பிரசாதம் ஆகும். இங்குள்ள ஆடியோக்கள் அனைத்தும், 'சித்தர் மெய்ஞானத் திறவுகோல்' நூலின் தொடர்ச்சியான மேல்நிலை விளக்கங்களே ஆகும். 'சித்தர் மெய்ஞானத் திறவுகோல்' நூல்களை வாசிக்கும்போது, அந்தந்த பக்கங்களை வாசித்து, அங்கே அதன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்ட ஆடியோ பதிவுகளை கேட்டுப் பின் தொடர்ந்து வாசிக்க, முழுக்கருத்தும் விளங்கும். 'சித்தர் மெய்ஞானத் திறவுகோல்' நூலானது, யோகத்தின் எளிய விளக்கங்களில் தொடங்கி சித்த மார்க்கத்தின் பெரும் நுட்பமான இரகசியங்கள் வரையில் அனைத்தையும் அடிப்படையிலிருந்து கற்றுத்தரும். ஆடியோக்கள் அனைத்தும், அறிந்ததிலிருந்து தொடர்ச்சியாக அறியாத கருத்துக்களுக்கு எடுத்துச் செல்லும்; எளிமையிலிருந்து பேரறிவுக்கு இட்டுச்செல்லும் குருவாய் இருந்து வழிகாட்டும். " 'சரியை கிரியை யோகம் ஞானம்' என எந்த நிலையில் இருந்தாலும் சகலத்திற்கும் பக்தியே அடிப்படையாகும்." "யோகம் பயின்றாலும், கற்பம் , வாசி, தவம், தியானம் என எவ்வகை சாதகங்கள் செய்தாலும் பரம்பொருளிடம் நன்றியுணர்வோடு உள்ளம் உருக பக்தி செலுத்துவதே எல்லாவற்றிற்கும் தலையாயதாகும்." 'பக்தி' இல்லாவிடில், சகல விதமான சாதகங்களும் வீணேயாகும்." ஆக, ஒவ்வொருவரும் 'ஞானம்' என்ற தலைப்பிலுள்ள அனைத்து ஆடியோக்களையும் அவசியம் கேட்டுத்தெளிவு பெறுக. ஆன்மஞானத் தெளிவே அனைத்திலும் மிக அடிப்படையாகும். அனைவர்க்கும் நல்லாசிகள். 'சிவம்'